மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் கீழ் 13வது தவணை தொகையை மத்திய அரசு நாளை செலுத்த உள்ளது. நாளை கர்நாடக மாநிலம் பெலகாவிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ஒரு பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் தகுதியான 8 கோடி விவசாயிகளின் கணக்கில் ரூ.16 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்ய இருக்கிறார். மேலும் e-KYC செய்யவில்லை என்றால், இந்த பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படாது.