இங்கிலாந்தின் கிரேட்டர் மான்டஸ்டரின் எக்லெஸ் (Eccles) பகுதியில் நடந்த ஒரு திகிலூட்டும் விபத்து தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100-ஆம் எண் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் (double-decker bus), வழக்கமான பாதையிலிருந்து விலகி குறைந்த உயரம் கொண்ட பாலத்தின் கீழ் செல்ல முயன்றதாலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
அந்த பாலத்தில் உயரக்குறிப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், பஸ் ஓட்டுநர் அதை முழுமையாக புறக்கணித்து செலுத்தியதால், பஸ்சின் மேல் அட்டை முழுவதும் அரிந்து விழுந்தது.
WILD FOOTAGE 🔴
This week, a double-decker Stagecoach bus on the 100 route crashed into the Bridgewater Canal Aqueduct in Eccles, Greater Manchester, tearing off its roof after ignoring height warnings. The bus had veered off its usual route. One passenger was ejected from the… pic.twitter.com/A2i5n8sRjC
— Open Source Intel (@Osint613) July 23, 2025
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் பஸ் நேராக பாலத்திற்குள் சென்று, மேல் பகுதியில் இருந்த அட்டை ஒரே தரத்தில் கழன்று விழுகிறது. வீடியோவில் சில விநாடிகளுக்குள் பஸ்சின் மேலே இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உருக்குலைகின்ற காட்சி சோகத்தை ஏற்படுத்துகிறது.
மேல்படிக்கட்டில் இருந்த ஒருவரே நேரில் கீழே வீசப்பட்டுள்ளார். இதையடுத்து அவசர சேவைகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 19 வயது பெண் ஒருவர் மற்றும் இரண்டு ஆண்கள் தற்போது கடுமையான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “யாரும் உயிரிழக்காமல் இருந்தது பெரும் அதிசயம் தான்” என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் செயல்படும் நேரங்களில் ஏற்படும் விளைவுகளுக்கு சிறந்த எச்சரிக்கை நிகழ்வாக அமைந்துள்ளது.
