திருச்சி மாவட்டத்தில் காட்டூரில் முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என் சேகரன் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மணமகன் அவரது தாய், தந்தை பேச்சை கூட கேட்க மாட்டார். நான் சொன்னால் மட்டும்தான் கேட்பார் என்று அமைச்சர் கே என் நேரு பேசும்போது கூறினார். மணமகனிடம் நான் தாலி எடுத்து கொடுத்தபோது அவரது அம்மா 2 முடிச்சு மட்டும் தான் போட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அதைக் கேட்காமல் மணமகன் 3 முடிச்சு போட்டு விட்டார். பின்னர் தான் தெரியவந்தது மணமகள் மூன்று முடிச்சுகளையும் நீங்கள் தான் போட வேண்டும் என்று கூறியுள்ளார் என்று. அந்த வகையில் மணமகன் சிவக்குமார் தற்போது இருந்து அவரது மனைவியின் பேச்சைக் கேட்க தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். அது தவறு கிடையாது. ஆனால் ஒரே அடியாக மனைவி பேச்சை மட்டும் கேட்காமல் தாய், தந்தை பேச்சையும் கேட்க வேண்டும். அரசியலில் அப்பா, மகன் உறவு மிகவும் முக்கியமானது. அப்பா பேச்சை கேட்காத மகன் என்ற பெயர் வாங்க கூடாது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கு, மகளிருக்கு, மாணவர்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் மாணவர்கள் மற்றும் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கழகம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நமது அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கிக் கூறும் பணியை ஓரணியில் திரண்டு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
