
நிதீஷ் குமாரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு கட்சிகளுடனும் அவர் முரண்பாட்டில் இருக்கிறார் என்பதை நம்மால் கடந்த காலங்களில் நடந்த கூட்டங்களில் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தின் போது ஹிந்தியில் பேச திமுக தலைவர்களை வலியுறுத்தியது, இந்தி குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் முரண்பாடாக இருந்தது.
அதேபோல மம்தா பனர்ஜியின் பெயரை ராகுல் காந்தி முன்னெடுத்தபோது, ஒருங்கிணைப்பாளராக அவரது பெயரை ராகுல் காந்தி முன்னெடுத்த போது அதற்கு நிதிஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது என பல்வேறு விஷயங்கள் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் நிதீஷ் குமார் முன்வைத்ததாக இருந்தது.
அதேபோல இந்த பெயர் விவகாரமும் I.N.D.I.A என்ற இந்தியா அலைன்ஸ் என்ற வார்த்தையும் அவருக்கு முதலிருந்தே விருப்பம் இல்லாமல் இருந்தது. இதற்கு மிக முக்கியமான காரணம் அதில் இருக்கக்கூடிய NDA என்ற பெயர் பாஜக கூட்டணி கட்சிகளுடைய பெயராக இருக்கிறது .NDA என்பது அவர்களுடைய பெயராக இருக்கிறது.
அது வரக்கூடிய INDIA என்ற பெயர் தனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை என்பதை அவர்கள் சொல்லி வந்தார். இருந்தாலும் கூட மற்ற கட்சிகள், குறிப்பாக திமுக உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் அதனை முழுமனதோடு வரவேற்று இருந்தார்கள்.
அதனை அடுத்து அவரது அப்போது இருந்தே அதிருப்தியில் இருந்து வந்தார். இது ஒரு காரணம். இந்த காரணத்தை தான் அவர் தற்போது வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். இந்த பெயர் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. அதனால் நான் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு எடுத்து இருக்கிறேன் என்ற ஒரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் நான் ஏற்கனவே பட்டியலிட்டது போல, இந்தி மொழி சார்ந்த அவரது நிலைப்பாடு, அதேபோல மம்தா பானர்ஜி உள்ளிட்ட மற்ற தலைவர்களை கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் முன்னெடுத்துச் செல்வது, ராகுல் காந்தி வார்த்தைகள், செயல்பாடுகள், மல்லிகார்ஜுன கார்கேவின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் ஒரு அதிருப்தி தெரிவித்து வந்தார்.
இவை அனைத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் தற்போது கூட்டணியில் இருந்து அவர் வெளியேறிருப்பதி தை புரிந்து கொள்ள முடிகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் இந்த கூட்டணியை அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து மிகவும் முக்கியமான வேலைகளை செய்தவர் நிதீஷ்குமார் தான். தற்போது அவரது வெளியேற்றமே இந்த கூட்டணி முழுமையாக உடையுமே என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றது.