தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்த நிலையில் தற்போது ஹிந்தியில் கிஸி கி பாய் கிஸி கி‌ ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பர்கத் சம்ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து என்டம்மா என்ற பாடல் அண்மையில் வெளியானது.

இப்பாடலில் நடிகர் சல்மான் கான் வேஷ்டி கட்டிக்கொண்டு ஆடுவது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தென்னிந்திய உடையை இழிவு படுத்தியதாக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தென்னிந்திய உடையான வேஷ்டியை இழிவு படுத்தும் வகையில் பாட்டு இருக்கிறது. அது லுங்கி அல்ல. அது வேஷ்டி. நம்முடைய கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளதோடு அந்தப் பாடலையும் வைத்துள்ளார்.