பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சமீபத்தில் கடுமையான வைரஸ் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குஷ்பு இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக அவரது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். அதோடு சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்த்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.