தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. முதல் முதலாக தனுஷின் தயாரிப்பு நிறுவனம் 3 திரைப்படத்தை தயாரித்தது.

அதன் பிறகு தனுஷ் எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரவுடிதான் மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களை தயாரித்தார். கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு மாரி 2 படத்தை தயாரித்திருந்த நிலையில் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தனுஷ் தயாரிக்கிறார்.