அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், விக்ரம் பிரபு , திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் போன்றவைகள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2 மணி நேரம் 37 நிமிடங்கள் வரை படம் ஓடும். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்களாக இருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கு 10 நிமிடங்கள் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதால் படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.