தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருட வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்க இருக்கிறது.

லியோ படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக நடித்தார். சில நிமிட காட்சிகளில் சூர்யா வந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதேபோல் தற்போது லியோ திரைப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் லியோ படத்திற்காக 15 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பாரா அல்லது ஏதேனும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் லியோ படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதாக வந்த தகவல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.