தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஒரு மாத காலமாக காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் நடந்தது. அதன் பிறகு இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது. லியோ படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். அதன் பிறகு பிரியா ஆனந்த், காயத்ரி, பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய்தத், மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் லியோ படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி லியோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடியிலிருந்து 375 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கோலிவுட் சினிமாவில் அதிக அளவு பட்ஜெட்டில் லியோ திரைப்படம் உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரு படங்களை விட லியோ படத்தின் பட்ஜெட் குறைவுதான். மேலும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.