கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில் காலணிகள் வைக்கும் பகுதிக்கு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வனத்துறை அதிகாரி செல்லாவுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி விரைந்து வந்த செல்லா காலனிகள் வைக்கும் பகுதியில் இருந்த ஷூக்களை எடுத்துப் பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் ஷூவில் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டார்.