சமூக வலைதளங்களை அதிரவைக்கும் அளவுக்கு ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் பரவி வருகிறது. இது சவால் வீடியோவோ, எடிட் செய்யப்பட்ட ட்ரெண்டிங்கில் இருக்கிற வீடியோவோ இல்லை. மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் ஜெய்ன்தியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள பத்தவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்தூ, எந்த ஆடம்பரமும் இல்லாமல், 10 கிலோவுக்கு மேல் உலர்ந்த சிவப்பு மிளகாய்களை தண்ணீர் இல்லாமல் சாப்பிடுகிறார். ஆனால் அவரது கண்ணில் கண்ணீர் எதுவும் வரவில்லை.
இந்த வீடியோ முதலில் 2021-ல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்தில் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த முறை ராம் பிர்தூவின் வீடியோ ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வலைதளங்களில் பகிரப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “இது அவர் பண்ணும் நாடகம் இல்லை, இது அவர் இயல்பே!” என்கிறார் அந்த கிராமத்தினர்.
இந்நிலையில், ராமைப் பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது. சிலர் கூறுவதாவது, மிளகாய் பொடியை அவர் சருமத்தின் மேல் மட்டுமல்லாமல் மிக நுணுக்கமான இடங்களிலும் போட்டும் எந்தவிதமான எரிச்சலோ, சுருக்கமோ தெரியவில்லையாம்.
ஆனால், இந்த தகவல்கள் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாதவை என்பதால், அவற்றை நம்புவது சற்று கவனமாக இருக்க வேண்டும். உண்மை ஒன்றே தெரிகிறது – ராம் பிர்தூவின் வீடியோ உண்மைதான்… அதிலும் அவர் சாப்பிடும் மிளகாய்களின் அளவு பார்க்கவே நெஞ்சம் கொதிக்குது.
