வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). தச்சு வேலை செய்யும் இவர், முதலாளியின் வீட்டிலேயேத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அதேப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம் நைசாகப் பேசி வந்த வெங்கடேசன், சனிக்கிழமை மாலைச் சிறுமி விளையாட வந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு, தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வெங்கடேசனிடம் இருந்துத் தப்பி ஓடியச் சிறுமி, அழுதுகொண்டே நடந்ததை அவரதுத் தாயிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், தச்சுத் தொழிலாளி வெங்கடேசனைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு, சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தாக்கியதால் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.