சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, ஓட்டுநர்களின் கவனக்குறைவைப் பற்றிக் கேள்விகளை எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒருச் சந்திப்பில் (Junction), வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த டிராஃபிக் காவலரை, பின்னால் மெதுவாக வந்த ஒரு டிரக் (Truck) மோதிய காட்சி பதிவாகியுள்ளது.
டிரக் மோதிய வேகத்தில், அந்தக் காவலர் சில அடிகள் முன்னோக்கித் தள்ளப்பட்டுச் சறுக்கினார். நல்லவேளையாக, அவர் கீழே விழுவதிலிருந்தும், டிரக்கின் அடியில் சிக்குவதிலிருந்தும் தப்பினார்.
Any idea what will happen to the truck driver now?
Incident from Unnao, UP pic.twitter.com/NU8YjCs7FF
— Piyush Rai (@Benarasiyaa) December 6, 2025
விபத்து நடந்தவுடன் டிரக் ஓட்டுநர் தனதுத் தவறை உடனடியாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் சிறிய தவறாக இருந்தாலும், போக்குவரத்துச் சந்திப்புகளில் ஓட்டுநர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
