இணையத்தில் ஒரு திகிலூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு மிகப் பெரிய ‘கேட்ஃபிஷ்’ (Catfish) என்ற ராட்சத மீன், ஒரு மனிதனின் அரை உடலை விழுங்கிவிடுகிறது.

மீன் வாய்க்குள் சிக்கிய நண்பரின் உயிரைக் காப்பாற்ற, அவரது மற்ற நண்பர்கள் பயங்கரமாகப் போராடுவது போன்ற காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ராட்சத மீன் விழுங்கிய நண்பரின் கால்களைப் பிடித்து ஒருவர் இழுக்கிறார். இன்னொருவர் தடியால் அந்த மீனின் தலையில் பலமாக அடிக்கிறார்.

மூன்றாவது நபர் மீனின் வாலைப் பிடித்துத் தடுக்கிறார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, நண்பர்கள் அந்த நபரை மீனின் வாயிலிருந்து வெற்றிகரமாக வெளியே இழுக்கின்றனர்.

ஆனால், இந்த வீடியோ பார்ப்பதற்கு உண்மையானதுபோல தோன்றினாலும், இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவாகும்.

“இது ஒரு ஹாரர் திரைப்படக் காட்சி போல உள்ளது” என்று பலர் கருத்துத் தெரிவித்தாலும், பல பயனர்கள் இது ஏஐ வீடியோ என்று உடனடியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.