வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காற்று வீசி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வினோத புகைப்படம் ஒன்று இணையதளவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அறையின் உட்புறம் குளிர்ச்சியைத் தருவதற்காகப் பொருத்தப்பட வேண்டிய குளிரூட்டியின் உள் அலகை, ஒரு நபர் தனது வீட்டின் வெளிப்பக்கச் சுவரில் சாலையைப் பார்த்தவாறு பொருத்தியுள்ளார்.

தெருவில் செல்வோருக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைந்துள்ள இந்த வினோத காட்சியைக் கண்ட நெட்டிசன்கள், நாட்டில் நிலவும் கடும் குளிருக்கு இவர்தான் காரணம் என்றும், மொத்தப் பகுதியையும் உறைய வைக்க இவர் முயற்சி செய்கிறார் என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mr Prem (@__mr___prem__)

தவறுதலாகப் பொருத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போதைய வாட்டும் குளிரையும் இந்த புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.