சமூக வலைதளங்களில் எப்போதுமே விசித்திரமான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளது.
சாலையில் எத்தனையோ சொகுசு கார்களைப் பார்த்திருப்போம், ஆனால் ஒரு காரின் மேல்பகுதி, கதவுகள், ஜன்னல்கள் என எதுவுமே இல்லாமல், வெறும் இன்ஜின், ஸ்டீயரிங் மற்றும் டிரைவர் சீட் மட்டும் அசுர வேகத்தில் ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு “பழைய இரும்பு” காரைத்தான் ஒரு நபர் அசால்ட்டாக ஓட்டிச் செல்கிறார். அந்த டிரைவர் அமர்ந்திருக்கும் சீட், தார்ச் சாலையில் உரசிக்கொண்டே செல்வது பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.
इसे कहते हैं असली Open Air ड्राइविंग एक्सपीरियंस
किया आप भी ऐसी ड्राइविंग का शोक रखते हैं? pic.twitter.com/MXIP73Vv1J
— 𝐌𝐫 𝐀𝐫𝐛𝐚𝐳❤️🔥 (@Mr_arbaz_77) February 19, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது நிஜமான ஓப்பன் ஏர் டிரைவிங் அனுபவம்” என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, “இது உயிருக்கே ஆபத்தானது, இப்படியெல்லாம் சாகசம் செய்யாதீர்கள்” என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். கார் முழுமையாகச் சிதைந்து போய், வெறும் எலும்புக்கூடாக இருந்தாலும், அதைச் சாலையில் ஓட்டிச் செல்லும் அந்த நபரின் ‘டிரைவிங் ஸ்கில்’ இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்
