மின்சாரம் இல்லாத போதோ அல்லது மிகக் குறைந்த செலவிலோ, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு காரியத்தை சாதிப்பது தான் இந்தியர்களின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பம் ஆகும்.

அந்த வகையில், குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேனை பயன்படுத்தி மிக எளிமையாக ஐஸ்கிரீம் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக ஐஸ்கிரீம் செய்ய அதிக நேரம் கைகளால் கடைய வேண்டும் அல்லது பிரத்யேக மின்சார இயந்திரங்கள் தேவைப்படும்.

“>

ஆனால், இந்த பெண் எந்தவித கடின உழைப்பும் இன்றி, சுழலும் சீலிங் ஃபேனின் மோட்டார் பகுதியில் ஒரு கயிற்றை இணைத்து, அதன் மறுமுனையை ஐஸ்கிரீம் தயாரிக்கும் பாரம்பரிய மரப்பாத்திரத்துடன் இணைத்துள்ளார். ஃபேன் சுழலும் போது ஏற்படும் விசையைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் கலவை தானாகவே மிக நேர்த்தியாக கடையப்படுகிறது.

அதோடு இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்த இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. குறைந்த செலவிலும், மிகக் குறைந்த உழைப்பிலும் சாதுரியமாகச் செயல்பட்ட அந்த பெண்ணின் அசத்தலான யோசனையைப் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் “இந்தியர்களின் கண்டுபிடிப்புத் திறனுக்கு எல்லையே இல்லை” என்றும், “இதுதான் உண்மையான இந்தியப் பொறியியல்” என்றும் நெட்டிசன்கள் இப்பெண்ணிற்கு தங்களது சல்யூட்டை அடித்து வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். கடினமான ஒரு வேலையை, அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருளைக் கொண்டு சுலபமாக மாற்றிய இந்த தேசி ஜுகாட் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.