அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதே சமயம் ஓபிஎஸ் முகாமில் உள்ள நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுப்பதில் அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிற்குப் பலத்த அடி விழுந்துள்ளது.
திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஜீவா செல்வம் மற்றும் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ் தரப்பின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட இவர்கள், தற்போது இபிஎஸ் பக்கம் சாய்ந்திருப்பது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
“தலைமை மாறினாலும், தாய் கழகம் ஒன்றே” என்ற கோஷத்துடன் நிர்வாகிகள் அணிமாறி வருவது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
