வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? எடப்பாடியை அட்டாக் செஞ்ச பாஜக!!

தமிழகத்தில் தற்போதைக்கு பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு இனிமேல் பதிலடி கொடுக்கப்படும் என்று சரமாரியாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் x பக்கத்தில் ட்விட் போட்டுள்ள பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ,

கட்சி மேலிடம் சொல்லித்தான் தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்றால், ஜெயக்குமாரே, நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள் என்று சொல்ல மாட்டீங்களா? மெயின் ரோட்டுக்கு வந்துடும்மான்னு சொல்வீங்களே, அந்தம்மா சொன்னாங்களா?

வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? @offiofDJ அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி

கோடநாடு கொலை, -கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுக ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்டத் தகுதி எங்கள் தலைவருக்கு இல்லை தான் என கூறி உள்ளார்.

 

Leave a Reply