சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அதிகளவில் ஆங்காங்கே வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்து அதனை காவிரியில் இன்று முதல் கரைத்து வருகின்றனர். இதற்கு கரைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனையடுத்து இன்றுசேலம்  மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமானோர் காவிரி ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேட்டூர் பக்கத்தில் தொட்டில்பட்டி என்ற ஊரில் இருக்கக்கூடிய கிராமத்தை ஒட்டி போக கூடிய கால்வாயில் தேங்கி இருக்க கூடிய தண்ணீரில் இரு பிரிவினர் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள்ளனர்.

அதாவது, வயது மூத்த இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள்  தன் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய 16 கண் ஓடையில் சிறிய அளவில் நிறுவப்பட்ட விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு யாருக்கும் சொல்லாமல் அவர்களாகவே  4 பேர் சென்று கரைக்க முற்பட்டனர். அப்போது அந்த 16 கண் ஓடையில் ஆழம் தெரியாமல் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதனை கரைக்க இறங்கி 2 பேர் மூழ்கியுள்ளனர்.. அவர்களுடன் சென்ற 2 பேர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் தொட்டில் பட்டியை சேர்ந்த சந்தோஷ்(14) நந்தகுமார்(14) இருவரும் உயிர் இழந்துள்ளனர்.

இருவருமே 9ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த இரண்டு சிறுவர்களும் பயின்று வந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினர்  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே  அங்குள்ள ஊர் மக்களால் மீட்கப்பட்டு இல்லத்தில் கொண்டுவரப்பட்டு இறந்து போன சிறுவர்கள் உயிரை காப்பாற்ற உறவினர்கள் முதலுதவி செய்தும் காப்பாற்ற முடியாமல் போனது. பின்னர் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.