மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், தனது முன்னாள் மனைவி மெலிண்டாவுடன் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.

சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட இந்த ஜோடியின் பிரிவின் போது, ஒரு மாபெரும் ஜீவனாம்ச ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மெலிண்டாவிற்கு மொத்தமாக 1,12,800 கோடி ரூபாய் வழங்க பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ரூ.41,700 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள 71,100 கோடி ரூபாயை பில் கேட்ஸ் வழங்கியுள்ளார்.

விவாகரத்து ஆனாலும், ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை மூலம் இருவரும் இணைந்து கல்வி மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் விலையுயர்ந்த விவாகரத்து ஒப்பந்தங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.