ஐபிஎல் ஏலத்தில் மிகச்சிறிய வயதிலேயே கோடிக்கணக்கில் விலை போய் அனைவரையும் வியக்க வைத்த 14 வயது இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இப்போது மீண்டும் ஒரு அதிரடி முடிவால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
இன்று தொடங்கிய சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை வைபவ் சூர்யவன்ஷி எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த இவர், தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளதால் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“கிரிக்கெட் பயிற்சி காரணமாக அவர் இந்தத் தேர்வை எழுதாமல் இருந்திருக்கலாம், அடுத்தடுத்த தேர்வுகளை அவர் எழுதுவார் என நம்புகிறோம்” என்று அவரது பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுக்காகப் படிப்பை தியாகம் செய்கிறாரா அல்லது பயிற்சியின் நெருக்கடியால் இந்த முடிவா என இணையத்தில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
