இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மோதலில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த கடிகாரம் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.

கொழும்பு மைதானத்தில் பந்துவீச்சில் மிரட்டிய பாண்டியாவின் கையில் மின்னிய அந்த ‘ஜேக்கப் அண்ட் கோ’ (Jacob & Co Epic X Chrono) பிராண்ட் கடிகாரத்தின் விலை சுமார் 32 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஒரு கடிகாரத்தின் விலையானது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் ஒரு வருடச் சம்பளத்தை விடவும் அதிகமாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பி-பிரிவு வீரர்களின் மாதச் சம்பளம் இந்திய மதிப்பில் சுமார் 9.7 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், பாண்டியா அணிந்திருந்த இந்த நீல நிற டைட்டானியம் கடிகாரமோ 32 லட்சத்தைத் தாண்டி நிற்கிறது.

ஏற்கனவே ரோலக்ஸ், ரிச்சர்ட் மில் எனப் பல கோடி மதிப்புள்ள கடிகாரங்களை வைத்திருக்கும் பாண்டியா, மைதானத்தில் தனது ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனது சொகுசு வாழ்க்கையாலும் பாகிஸ்தானை வாய் பிளக்க வைத்துள்ளார்.