தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இரண்டு முறை சூப்பர் ஓவர் வரை சென்றும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி கேப்டன் ரஷித் கானுக்குப் பெரும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தவும், மனநிலையை மாற்றவும் தனது அணி மேலாளரிடம் தந்துரி சிக்கன், பேஷ்வாரி வகை உணவுகள் மற்றும் தால் மாக்னி ஆகியவற்றை உடனடியாக ஆர்டர் செய்யுமாறு ரஷித் கான் கூறியுள்ளார்.

​தோல்விக்குப் பிறகு வீரர்கள் சோகமாக இருக்கும் நிலையில், ரஷித் கானின் இந்த ‘ஃபுட் அட்டாக்’ முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “தோல்வியால் வந்த கோபத்தை தணிக்கச் சுவையான காரசாரமான உணவுகளே சிறந்த மருந்து” என அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கிரிக்கெட் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் ரஷித் கான், நிஜ வாழ்க்கையில் ஒரு தீவிர உணவுப் பிரியர் என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரஷித் கானின் இந்த “சிக்கன் மேட்டர்” தற்போது வைரலாகி வருகிறது.