கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மறித்து காவல் துறையினர் சோதனை செய்த நிலையில் உள்ளாடைக்குள் பணம் மற்றும் நகைகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 200 கிராம் தங்கம் மற்றும் ரூ. 70 லட்சம் ரொக்க பணத்தை அவர்கள் கடத்திச் சென்ற நிலையில் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.