தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் இந்தியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டான நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் என நட்சத்திரங்கள் பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல படபிடிப்பு தளத்தில் 30 நாட்கள் நடைபெற இருக்கின்றதாம். இதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வருகின்றார்கள்.