சென்ற 2019 ஆம் வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அண்மையில் இவர் நடிப்பில் லவ் டுடே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ,ஆதித்யா கதிர் என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தார்கள்.

சென்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி நூறு நாட்களை கடந்த நிலையில் பட குழு இதற்காக பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொண்டாடி இருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். இதில் பங்கேற்ற ஜிபி முத்து, கதாநாயகி மற்றும் சாண்டி மாஸ்டர் உடன் மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.