தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு பிசியான நடிகராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழியிலும் அதிக அளவு படங்களில் பணிபுரிந்து வருகிறார்‌.

இந்நிலையில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் பிரபுதேவாவின் மொத்த சொத்து மதிப்பு 137 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் பிரபுதேவாவுக்கு ஆடம்பரமான பங்களா மற்றும் பல விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.