பிரபல ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து எமி ஜாக்சன் பல படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வராமல் இருந்த எமி ஜாக்சன் தற்போது ஏ.எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை எமி ஜாக்சன் ஆண்ட்ரூஸ் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் அவர் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் சில காரணங்களால் ஆண்ட்ரூஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்து எமி ஜாக்சன் விலகிய நிலையில் தற்போது Ed Westwick என்பவரை காதலித்து வருகிறார். இவருடன் சேர்ந்து எமி ஜாக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காதலர் தினத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதால் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)