குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. இடையில் பல சருக்கல்களை சந்தித்த இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. தற்போது இவர் நடிப்பில் பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தை அடுத்து சிம்பு யார் இயக்கத்தில் நடிக்க போகின்றார் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்புவின் கார், வீடு என அவரின் முழு சொத்து விவரம் குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. அவருடைய மொத்த சொத்து மதிப்பு 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.