தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது புஷ்பா 2 மற்றும் ரெயின்போ போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகையாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா பிரபல நடிகர் விஜய் தேவர கொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவுகிறது. ஆனால் பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசை நடிகை ராஷ்மிகா காதலிப்பதாகவும் அதனால் விஜய் தேவரகொண்டாவுடன் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஊடகம் ஒன்று நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவர கொண்டாவும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றும் நிச்சயமாக விரைவில் ஒரு பெரிய செய்தி இருக்கும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு நடிகை ராஷ்மிகா பதிலடி கொடுத்துள்ளார். அவர் ரொம்ப அதிகமா யோசிக்காதீங்க பிரதர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.