தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  BJP-க்கு  போடக்கூடிய ஒரு ஓட்டுல,  திரும்ப சென்னையை கட்டக்கூடிய வல்லமை நமக்கு கிடைக்கும். மறுபடியும் சென்னையை புதிதாக உருவாக்கி,  ஒரு குளோபல் சிட்டியாக உருவாக்கி சென்னையை பெருநகரத்தோடு கம்பிட் பண்ணுற  அளவுக்கு சென்னை இன்னும் பொலிவுபடுத்த  நமக்கு ஒரு எம்பி தேவைப்படுறாங்க.பாராளுமன்றத்துல உறக்கமா பேசுவதற்கு ஒரு எம்பி தேவைப்படுகிறார்கள். இது எல்லாம் நீங்க பேசணும்…. 

எல்லா வீட்டுக்கும் நீங்க ஏறி இறங்கனும். இன்னையிலிருந்து 70 நாட்களுக்கு நீங்கள் ஒருவரும் சபதமெடுத்து, அண்ணே….  நான் புதுசா 100 பேரை நான் கட்சியில் இணைக்கிறேன் என்று முடிவு பண்ணா போதும்.  ஒரு நாளைக்கு ஒருத்தர்….. போகும் போது நம்முடைய பொறுப்பாளர் இருக்கிறாங்க…. மாவட்ட தலைவர் இருக்காங்க…..  ஆபீஸ்ல போய் கார்டு வாங்கிட்டு பாக்கெட்ல வச்சுக்கோங்க…

கார்டு வாங்கி பாக்கெட்ல வச்சிக்கோங்க.  யாரோ ஒருத்தர் கிட்ட போய், ஆபீஸ்ல இருக்கீங்க…. டீ கடையில் இருக்கீங்க….  கேண்டின்ல இருக்கீங்க….  லஞ்ச் டைம்ல பேசுறீங்க…. மோடியை பத்தி பேசுறீங்க….. பிஜேபி ஆட்சியை பற்றி பேசுறீங்க....  நன்றாக பேசுகிறார்களா ? அப்படியே கார்ட்டை எடுத்து 8580808080 நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்க வச்சு, அப்படியே மெம்பர் ஆக்கி….  அப்படியே கையெழுத்து போட்டு, அவருக்கு  அங்கேயே  கொடுத்து ஒரு செல்பி எடுத்து அவரு கையில் கொடுத்துருங்க.

ஏனென்றால் அவருக்கு நீங்க மோட்டிவேட் பண்ணனும் ? பாரதிய ஜனதா கட்சியின் மெம்பர் சீப் என்பது இந்த நாட்டை பலப்படுத்துவதற்கு நீங்களும் ஒரு அங்கமாக மாறுறீங்க.பாக்கெட்ல எப்போதுமே உறுப்பினர் அட்டை வச்சிக்கோங்க. புதிய இருப்பின் அட்டை எப்போது உங்க பாக்கெட்ல இருக்கணும் என தெரிவித்தார்.