தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  கரு. நாகராஜன் அண்ணே எப்போதும் வண்டியில் BJP உறுப்பினர் அட்டை வச்சி இருப்பாரு. நான் அடிக்கடி அவருகிட்ட வாங்குவேன். அதனால் மேடையில்  இருக்க கூடிய பொறுப்பாளர்கள் பாக்கெட்ல உறுப்பினர் கார்ட் இருக்கணும். யாரெல்லாம் பொறுப்பாளர்கள், இங்கு வந்துருக்க கூடிய மாவட்ட தலைவர்கள், கிளை தலைவர்கள் முதல கார்டு வாங்கி பாக்கெட்ல வச்சிக்கோங்க. ஏனென்றால் அது ஒரு ஹபிட்… நல்ல ஹபிட் அது. நல்ல ஆத்மார்த்தமான விஷயம்.

நீங்க பேசி பேசி கார்டு போட்டா…. உங்களுக்கே பழகிடும்… ஓஹோ…. கார்டு போட்டு கொடுத்தோம்…. JOIN பண்ணுனோம்…. அது ஒரு மோட்டிவேஷன்….  கார்டு வாங்கியவர் சும்மா இருக்க மாட்டாரு…. ஏம்பா…. என்னை மட்டும் சும்மா இருப்பவனை நீ சேர்த்துடுவ….அவரு போய் ரெண்டு பேரை சேர்ப்பார். இதான் செயின் ரியாக்ஷன். அந்த ரெண்டு பேர் இன்னும் ரெண்டு பேரை சேர்ப்பாங்க. செயின் ரியாக்ஷன் மாதிரி போயிட்டே இருக்கும்.

எங்கேயோ ஒரு இடத்தில் தீப்பெட்டியாக பற்ற வைப்பீர்கள்….எங்கேயோ ஒரு இடத்துல  சரவெடி வெடிக்கும். அதனால எங்க நீங்க பார்த்தாலும் இவர்களை உறுப்பினராக முடியுமா ? என்று யோசிங்க. இவர்களை பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் கொண்டுவர முடியுமான்னு யோசிக்கணும்….  அதெல்லாம் இவங்க கிட்ட போய் பேசல….  70 நாள் எனக்கு இருக்கு…. நான்  ஒரு நாள்  காலைல ஒரு இடத்துல டீ குடிக்க போறேன்,  சாயங்காலம் ஒரு இடத்துல டீ குடிக்க போறேன்….  என் டார்கெட் 20 வீடுகள்…. காலையில் ஏறுவேன்…. சாயங்காலம் ஒரு பத்து வீடு ஏறுவேன்…. உங்களுடைய வேலைப்பளு எப்படி இருக்கிறதோ,  அதற்கு தகுந்தார் போல்….  நீங்க ஒரு 30 வீட்டுக்கு ஏறி இறங்குங்க என தெரிவித்தார்.