சென்னை மாதவரத்தில் உள்ள பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வந்திருந்தனர். இவர்கள் மண்டபத்தின் மேல் தளத்திற்கு செல்வவதற்காக அங்குள்ள லிப்டை பயன்படுத்தி உள்ளனர். ஒரே நேரத்தில் 11 பேரும் லிப்டில் ஏறியதால் பாரம் தாங்காமல் லிப்ட் நின்றது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் லிப்ட்டிற்க்குள் இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் இரண்டு பெண்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.