தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக அறிமுகமாகி, வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் அனுபமா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘கிஷ்கிந்தாபுரி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது துருவ் விக்ரம் உடன் நடித்துள்ள ‘பைசன்’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படம் அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி வழங்கப்பட்ட ஒரு நேர்காணலில், அனுபமா தனது பள்ளி நாட்களைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார். “நான் சின்ன வயதிலிருந்தே நடிக்க ஆசைப்படுவேன்.

ஆனா என் பள்ளியில், நல்ல படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் அப்படி வாய்ப்பு கொடுப்பாங்க. காரணம், பெரிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்பதால், நல்லா படிப்பவங்களுக்குத் தான் நடிப்பு சாத்தியம் என எல்லாம் சொல்லுவாங்க.

நான் ஸ்கூல் டாப்பர் இல்ல. அதனால, ‘நடிகையா முடியாதே’ன்னு நெனச்சு பயந்துட்டேன்” என மனம் திறந்துள்ளார். தொடர்ந்து, “அதனால் என்னோட கனவை தற்காலிகமாக தள்ளி வச்சேன். ஆனா பிறகு வளர்ந்த போது தான் புரிஞ்சது, படிப்பு மட்டும் முக்கியம்னு சொன்னா நம்ம திறமைகள் ஒண்ணும் வளர முடியாது.

படிப்புக்கும், நடிப்புக்கும் நேரடி சம்பந்தம் கிடையாது என்பதையும் நேர்மையா புரிஞ்சுக்கிட்டேன்” என அனுபமா கூறியுள்ளார். அவரது இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.