கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சமும், தவெக சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேரிழப்பைத் தொடர்ந்து விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், சர்கார் படத்தில் விஜயுடன் நடித்த நடிகர் ஆரு பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட குறிப்பே தற்போது வைரலாகியுள்ளது.
இந்த பதிவில் அவர் ” சர்கார் படம் சூட்டிங்லே என் படத்தை எந்த தியேட்டர்ல பார்ப்பீங்கனு கேட்டாரு .. உதயம் தியேட்டர்ல பார்ப்பேன் சார் சொன்னே.. லேசாக சிரித்து விட்டு. நான் அரசியலுக்கு செட்டாவேனா கேட்டாரு.. நான் சிரித்த படி நீங்கள் அரசியலுக்கு செட்டாக மாட்டீங்க சார் சொன்னே ஒரு நொடி என் முகத்தை உண்ணிப்பாக கவனித்து விட்டு ஏன் அப்படி சொல்றீங்க கேட்டாரு..உங்க மேல கொலை கேஸ் இல்லை.. உங்க மேல கற்பழிப்பு வழக்கு இல்லை..உங்ககிட்ட சாராய பேக்டரி இல்லை..உங்க மேல கட்ட பஞ்சாயத்து கேஸ் இல்லை ..கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிற மெடிக்கல் காலேஜ் இல்லை..உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆள் இல்லை.
இது எதுவுமே உங்ககிட்ட இல்லை அதனால் நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க சார் சொன்னே..லேசாக சிரித்து விட்டு மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவை இல்லையே நண்பா என்றார்..ரொம்ப சென்சிட்டிவ் ஆன மனிதன்.. இப்படி ஒரு நிகழ்வு அவர் மனதை மீளா துயரத்திற்கு கொண்டு சென்று இருக்கும்..உயிர் இழந்த ஆண்மாகளுக்கு ஆழ்ந்த இரங்கல்” என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
