அதிமுகவில் உள்கிளர்ச்சி சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையன் அணிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைவு அவசியம் என்று பொதுவில் பேசிய செங்கோட்டையனின் கட்சி பதவிகள் ஏற்கனவே பறிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (செப்.30) அவரது ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனிசாமி எடுத்த இந்த முடிவு, கட்சியின் உள்நிலை வலிமையை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், எதிர்கால தேர்தல் தயாரிப்புகளுக்கு முன்னோடியான செயல் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.