73 வயதான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதுமையை அறவே தடுத்து இளமையைத் தக்கவைக்கும் புதிய ‘ஜீன் தெரபி’ (Gene Therapy) மருந்துகளை உருவாக்கத் தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மனித உடலில் செல்கள் முதுமையடைவதற்குக் காரணமான ‘RAGE’ என்ற மரபணுவைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், மனித ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என ரஷ்ய விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதற்காகத் தனது மூத்த மகள் மரியா வொரொன்ட்சோவாவையும் இந்த ஆராய்ச்சிப் பணிகளில் புடின் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. புடின் இவ்வளவு காலம் உயிர்வாழத் துடிப்பதற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது 11 வயது மகன் இவான் ஸ்பிரோடோனோவ் வளர்ந்து நாட்டின் அதிபராவதற்குத் தகுதியான 35 வயதை அடையும் வரை, தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே புடினின் ரகசியத் திட்டமாம். இதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட ஆயுள் குறித்து புடின் ரகசியமாகப் பேசியதும் தற்போது கசிந்துள்ளது.
உக்ரைன் போரில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், புடின் தனது ஆயுளை நீட்டிக்கக் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
