கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி புது டெல்லியில் உள்ள ஃபெரோஸ்பூரில், தனது மகளின் கைகளையும் கால்களையும் கட்டி, ஒரு கால்வாயில் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர், அந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 68 நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று கூறி, தன் தந்தையை விடுதலை செய்யக் கோரி முன்வந்துள்ளார்.
68 दिन पहले माँ- बाप ने जिस बेटी क़ो हाथ पैर बांधकर नहर में फेंका था.. वह घर लौट आई .. चमत्कारिक रूप से जिन्दा मिली.. अब जेल में बंद पिता की रिहाई की मांग की
पंजाब के फ़िरोज़पुर में इंसानियत को शर्मसार कर देने वाली एक घटना एक चमत्कारिक मोड़ के साथ सामने आई है। जिस 17 वर्षीय… pic.twitter.com/4TmUowPfHY
— TRUE STORY (@TrueStoryUP) December 9, 2025
அந்தக் காணொலியில், தான் உயிருடன் இருப்பதாகவும், கொலைக் குற்றத்திற்காகச் சிறையில் இருக்கும் தன் தந்தையை விடுதலை செய்ய வேண்டுமென்றும் அவர் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கால்வாயில் தள்ளப்பட்ட பிறகு தான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பதையும் அவர் விவரித்துள்ளார். அந்தச் சிறுமி, தன் தந்தை சுர்ஜித் சிங் தன்னைக் கால்வாயில் தள்ளியதாகவும், தண்ணீரில் மூழ்கிவிட்ட நிலையில், திடீரெனக் கைகள் விடுவிக்கப்பட்டு, நீருக்கு மேல் மிதந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு, ஏதோ ஓர் இரும்புப் பொருளின் உதவியைப் பிடித்துக்கொண்டு, எப்படியோ கால்வாயின் கரையை அடைந்து வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுமி தான் எங்கிருந்தேன் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், தான் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது மூன்று இளைய சகோதரிகளையும் சரியாக வளர்க்கத் தன் தந்தை விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தன் தாயின் தூண்டுதலின் பேரில் தான் தந்தை அவரைக் கால்வாயில் தள்ளியதாகவும், தன் தந்தையைப் போலவே தன் தாயும் குற்றவாளி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், தந்தையின் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். மேலும், உறவினர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, ஃபெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி. பூபிந்தர் சிங் கூறுகையில், சிறுமி உயிருடன் மீட்கப்பட்டது நல்ல செய்தி என்றும், சிறுமியின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி உயிருடன் மீட்கப்பட்டதால், அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குச் சட்டப் பிரிவுகள் மாற்றப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
