டெல்லி மெட்ரோ, தலைநகரத்தின் உயிர்நாடி மாதிரி. அதில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கறார்கள். ஆனால் , சின்ன சின்ன தவறுகளால் பெரிய பிரச்சனைகள் உருவாகி, சண்டை-சச்சரவுகள் வருவது வாடிக்கையாகிடுச்சு. இருக்கைக்காக சண்டை, மொபைலில் உரத்து பேசுறது, தள்ளுமுள்ளு, வரிசையை மீறுறது இதெல்லாம் பயணிகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்குது. இப்போ சமூக வலைதளங்களில் இப்படி ஒரு வீடியோ வைரலாகி, பயணத்துல பொறுமையும், நாகரிகமும் எவ்வளவு முக்கியம்னு எல்லாரையும் யோசிக்க வைத்துள்ளது.

அந்த வீடியோல், இரண்டு பெண்கள் ஏதோ ஒரு விஷயத்துக்காக வாக்குவாதம் செய்யறாங்க. ஒரு பெண் மெட்ரோ இருக்கையில் உட்கார்ந்திருக்க, இன்னொரு பெண், கருப்பு உடையில் நின்னுக்கிட்டு, ஆக்ரோஷமாக பேசறாங்க. வாக்குவாதம் முற்றி, இருவருக்கும் இடையே பதற்றம் தாறுமாறாக உயருது.

பக்கத்துல இருக்கற ஒரு பெண், ஒரு ஆண், இன்னும் ஒரு போலீஸ்காரர் கூட அந்த கோபமான பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால்  அவங்க கோபம் குறையாம மேலும் அதிகமாகுது. வீடியோவுல கருப்பு உடை பெண், “நான் ஜட்ஜோட மகள், இவளை விடமாட்டேன், இப்போ பாரு!”னு மிரட்டறாங்க.

அவங்க பேச்சுல இருந்து தன்னை மத்தவங்கள விட உயர்ந்தவளா நினைக்கறது தெளிவாக தெரியுது. ஆனா, இருக்கையில் உட்கார்ந்த பெண், “நான் எதுவும் தப்பு சொல்லல”னு மட்டும் சொல்லி, பிரச்சனையை பெரிசாக்க விரும்பாம இருக்கறாங்க. இந்த வீடியோவை, இதை இதுவரை ஆயிரக்கணக்கான பேர் பார்த்து, ஷேர் பண்ணி, பரபரப்பாக பேசி வருகிறார்கள்.