ஐதராபாத்தின் புகழ்பெற்ற உணவகத்தில், சமையல் கூடத்திற்குப் பதிலாக கழிவறை போன்ற மிக மோசமான, சுகாதாரமற்ற இடத்தில் பிரியாணி அண்டாக்களை வைத்து உணவு சமைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாந்தி எடுக்க வைக்கும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரணீத் என்ற எக்ஸ் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பார்ப்பதற்கே அருவருப்பான ஒரு குறுகிய இடத்தில் பிரியாணி அண்டாக்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதும், சமையல் ஊழியர் ஒருவர் அங்கேயே படுத்துக் கிடப்பதும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இவங்க கிச்சன்ல சமைக்கிறாங்களா இல்ல பாத்ரூம்ல சமைக்கிறாங்களா? இதைப் பார்த்தாலே வாந்தி வருது” என ஹோட்டல் நிர்வாகத்தைக் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

“>

வெளியூர் மற்றும் ஐடி ஊழியர்கள் அதிகம் சாப்பிடும் ஒரு பிரபலமான உணவகத்தில் அரங்கேறியுள்ள இந்தத் திடுக்கிடும் சுகாதார சீர்கேடு, “தயவுசெய்து வெளியிடங்களில் சாப்பிடுவதை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்துவிடுங்கள்” என்ற விழிப்புணர்வு எச்சரிக்கையுடன் இணையத்தில் தற்போது பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.