துரோகம் செய்த கணவனைப் பழிவாங்க நினைத்த மனைவிக்குச் சட்ட ரீதியாகச் சிக்கல் வந்தாலும், அவர் அதைக் கையாண்ட விதம் உலகையே வியக்க வைத்துள்ளது.
சீனாவின் ஹெனான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்தவர் நியூ நா (Niu Na). இவரது கணவர் காவ் ஃபீ (Gao Fei), கடந்த 5 ஆண்டுகளாகத் தனது சக ஊழியர் ஒருவருடன் ரகசியத் தொடர்பில் இருந்துள்ளார்.
இது தெரிந்ததும் ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் (Douyin) பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக மனைவி மீது வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், “கணவர் செய்தது தார்மீகத் தவறாக இருந்தாலும், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் பரப்புவது சட்டப்படி தவறு” எனக் கூறி, மனைவிக்கு வினோத தண்டனை வழங்கியது.
அதாவது, அடுத்த 15 நாட்களுக்குத் தனது கணவனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பெண் மன்னிப்பு கேட்ட விதம்தான் இப்போது செம வைரல்!
ஒவ்வொரு மன்னிப்பு வீடியோவிலும், “உன் கள்ளக்காதலியைப் பாதுகாக்க நீ அடி வாங்கியபோது உன்னை ‘பன்றி’ என்று சொன்னதற்கு என்னை மன்னித்துவிடு; நீ ஒரு சிறந்த காதலன்” என மிக நக்கலாகவும், அதே சமயம் கணவனின் முகத்திரையைக் கிழிக்கும் வகையிலும் பேசி வருகிறார். இந்த ‘ஐரோனிக்’ மன்னிப்பு வீடியோக்களால் அவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர்.
