செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தீபாவளி,  பொங்கல் அன்னைக்கு 600 கோடிக்கு குடிக்கிறாங்க. ஒரு நாள் ஒரு பட வசூல் 34 கோடி. பொழுதுபோக்குக்கு…. கேளிக்கைக்கு இவ்வளவு முதலீடு செய்ய காசு  இருக்கும்போது,  மக்களுக்கு எதுக்கு இலவசம் ஏன் என்று தான் நானும் கேட்கிறேன்… கொடுக்காத என்கிறேன்… 

ஒரே நாளைக்கு 600 கோடி குடிக்கிறாங்க…  அரசே அறிவிக்கிறது 600 கோடி என்றால் ? அவன்  800 கோடி,  900 கோடி கூட குடிச்சி இருக்கலாம். அப்போ எப்படி நீங்க அனுமதிக்கிறீங்க?  இலவசம் என்கின்ற சொல்லே இல்லாமல் ஒழிக்கணும். இலவசம் பெறவேண்டிய ஏழ்மை வறுமை நிலை இல்லாமல் என் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தனும். இதான் எங்க கோட்பாடு.

அதான் நல்ல ஆட்சி முறை. ஆட்சியாளர் உமர் அவர்கள்,  ஒருத்தன் திருடுனான் அப்படின்னா கைய வெட்டுடா அப்படிங்குறாரு… அவனே பசிக்காக திருடி இருந்தானா…  ஆட்சியாளன் கைய வெட்டுடா என்கிறாரு… அதனால தான் அவன் ஆட்சியாளர் உமர் என்று சொல்லுறோம்.   இவங்க அப்படி கிடையாதே…  இவங்க பசியோட இருக்குறவன் சட்டையை கழட்டிட்டு போவாங்களே ஒழிய,  திருடிட்டு போவாங்களே ஒழிய….

குழந்தைக்கு பாலின அச்சுறுத்தலை கொடுத்த 4 காவல்துறை  அதிகாரியை சஸ்பெண்ட்  செய்தது குறித்து பேசிய சீமான், அது தான் பண்ணுவாங்க. சஸ்பென்ஷன் என்கிறது ஒரு தண்டனையே கிடையாது. ஒரு பனிஷ்மென்ட்யே கிடையாது. ஒரு மாசம் இருக்க வைப்பீங்க. பணியிடம் மாற்றி, வேற இடத்துல போஸ்டிங் போடுவிங்க.  இது எப்படி தண்டனையாகும்? என தெரிவித்தார்.