இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது.

இந்த நிலையில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை புதிய வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும். வாகனம் ஓட்டிய நபருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதையும் விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.