கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது. இந்நிலையில், இரு துறைகளின் செயலாளர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது.