வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடலில் ரோமன் புயல் தொடங்கி விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை காலை இது தீவிர புயலாக மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.