திருநெல்வேலிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்டது சமீபத்தில் வெளியானது. அவர் நாங்கள் அரசு வேலை பார்ப்பவர்கள் எங்களுக்கு டிக்கெட் கிடையாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது .

இதனை அடுத்து சென்னையில் நோ பார்க்கிங் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இருரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பேருந்து நடத்துனரும், காவலரும் சமாதானமாக பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள்.

பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பிரச்சனையானது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பேருந்து நடத்துனர் சொல்கிறார். அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் போக்குவரத்து துறையும் காவல்துறையும் நண்பர்களாக செயல்படும் என்று காவலர் பேசுகிறார். பின்னர் இருவரும் சேர்ந்து டீ குடிக்கிறார்கள்.