பிரதமர் மோடி அவர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான் என்றும், பயாலஜிக்காக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று கூறியிருந்தார். பிரதமர்  மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சுவாரசியமான பதிவை போட்டுள்ளார்.

அதாவது கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியிருந்ததற்கு ரூ.80.6 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “கடவுள் அனுப்பிய உயிரியல் அல்லாத உயிரினத்திடமிருந்து, மனிதர்கள் எப்படி காசு கேட்கிறார்கள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.