தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  கன்னியாகுமரியில் பெய்யும் கனமழையால் கோதையாறு, பழையாறு, பெரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், பழையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் 3 மாவட்டங்களில், இரவு 7 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.